Wednesday, May 19, 2010

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதின் மூலம், வருமான வரி விலக்கு பெற முடியுமா?

ஓபன் என்டட் மற்றும் குலோஸ் என்டட் மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன ? (What are open ended & closed ended mutual funds?)

ஓபன் என்டட் மியூச்சுவல் ஃபண்ட்-யில் (Open ended mutual funds), இவற்றின் யூனிட்களை (units) முதலீட்டாளர் எப்போது வேண்டுமானலும் வாங்கலாம், அதே சமயம் எப்போது வேண்டுமானாலும் விற்கலாம். இதனை லிக்விடிட்டி (Liquidity) என்று அழைக்கப்படும். இதற்கு கட்டணமாக நம்மிடமிருந்து ஒரு தொகை அப்போதைய பிளானின் NAV-யை கொண்டு கணக்கிட்டு எடுத்துக்கொள்வார்கள்.

குளோஸ் என்டட் மியூச்சுவல் ஃபண்ட் (Closed ended mutual funds), இது உங்கள் ஏறியாவில் நடக்கும் சீட்டு போல, ஒரு குறிப்பிட்ட கால்த்திற்கு மட்டுமே கிடைக்கும். பொதுவாக ஐந்து முதல் ஏழு வருடங்களுக்கு நடத்துவார்கள்.

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதின் மூலம், வருமான வரி விலக்கு பெற முடியுமா?
ஆமாம். குறிப்பிட்ட மியூச்சுவல் ஃபண்ட் பிளான்களுக்கு, வருமான வரி விலக்கு உண்டு (Income tax rebate). இப்பிளான்களின் மூலம் பெறப்படும் வருமானத்தில், இருபது சதவிகித்திற்கு(20%) இன்கம் டாக்ஸ் ஆக்ட் (Income Tax Act)-ன் கீழ் வருமான வரி விலக்கு கிடைக்கும்.

0 comments:

tamil varthagam pangu santhai share market © 2008 Por *Templates para Você*